
மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும் தற்போது மநீம கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் ஷங்கர் ரவி தெரிவித்துள்ளார்