நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தகுதி உள்ள விவசாயிகளுக்கு 16 தவணை பணம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக 17 வது தவணைக்கான தொகை ஜூன் மாதத்தில் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவது மிகவும் தாமதமாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் eKYC அப்டேட் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சிலருக்கு 16வது தவணை பணமே வராமல் உள்ளது. அப்படி ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.