அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் நவம்பர் 5ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உட்கட்சிப் பூசல்களும், சர்ச்சைகளும் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

“>

 

அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தற்போதைய அரசியல் நிலைமை, முக்கியத் தீர்மானங்கள், வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்கள் போன்றவை விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.