
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்பு குறியீட்டின் அடிப்படையில் நாட்டில் முதல் 75 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்திற்கு ஒன்பதாவது இடத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்ற 22 மாவட்டங்களில் மதுரை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தேசிய மற்றும் மாநில தலை வரிசையில் கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. மாநிலங்கள் அடிப்படையிலான தரவரிசையில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த தமிழகம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.