
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் மிருணாள் தாகூர். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், மிருணாள் தாக்கூருக்கு விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என பேசினார்.
இதனை மறுத்துள்ள மிருணாள், இப்படிப்பட்ட வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை. யார் அந்த நடிகர் என்பதை தெரிந்துகொள்வதில் உங்களைப் போலவே நானும் ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.