படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், நடிகை கங்கனா வருத்தத்தில் உள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான ‘தலைவி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில்  சமீபத்தில் வெளியான ‘தேஜஸ்’ படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2, தாக்கட், தலைவி, பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி, ஐ லவ் நியூயார்க் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியது. அடுத்து இந்திரா காந்தியாக நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் வெளியாக இருக்கிறது.