பொங்கலையொட்டி அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் ஜன. 11-ல் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதனை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு ஜன.,11-ல் ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகிறது. ஆனால், வாரிசு படத்தின் டப்பிங்கான வாரசுடு படம் ஜன.,14-ல் வெளியாகவுள்ளது. மேலும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி ஜன.,12 மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா ஜன.,13-ந் தேதி வெளியாகின்றன.