இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் முக்கியமாக whatsapp செயலியையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக பல ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன் மூலமாக பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இது whatsapp மூலம் அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அந்த நிறுவனம் எஐ மற்றும் மெஷின் லேர்னிங் பயன்படுத்தி தற்போது  Silence Unknown Callers வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கதற்காகவே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நமக்கு  வரும் அழைப்புகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதற்கு முன்பே scam, spam போன்ற அழைப்புகளுக்கு ஸ்கிரீன் பாதுகாப்பு இருந்தாலும் இது கூடுதல் பாதுகாப்பாக வேலை செய்யும். இதை ஆக்டிவேட் செய்தவுடன் செல்போனில் பதிவில் இல்லாத எண்களில் இருந்து ஏதேனும் அழைப்புகள் வந்தால் உடனடியாக சைலன்ஸ் செய்யப்படும். நமக்கு அழைப்புகளுக்கான ரிங் ஒலிக்காது இருப்பினும் மிஸ்டுகால் நோட்டிபிகேஷன் கட்டாயமாக காட்டும்.

இதை எப்படி செட் செய்வது என்றால், முதலில் உங்களின் Whatsapp திறந்து Settings உள்ளே செல்லவும். அதில் Privacy பக்கத்திற்கு சென்று Calls பட்டனை திறக்கவும். அதில் Silence Unknown Callers ஆப்ஷன் ஒன்று இருக்கும். அதை அழுத்தியவுடன் உடனடியாக உங்களுக்கு இந்த பாதுகாப்பு வசதி Activate ஆகிவிடும். இந்த வசதி Android மற்றும் ஐபோன் இரண்டிலும் உள்ளது.