இன்று பல இடங்களிலும் செல்போன் வெடித்து விபத்து ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கான காரணம் பலருக்கும் தெரிவதில்லை. தற்போது செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம். ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தாமல் மற்ற சார்ஜர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பணத்தை சேமிப்பதாக நினைத்து இந்த சிக்கலை மாட்டிக் கொள்ள வேண்டாம். பல வருடங்களாக செயல்படுத்தி செயல்திறன் குறைந்த பேட்டரி பயன்படுத்தாமல் புதிதாக மாற்ற வேண்டும். வீக்கமாக  இருக்கும் பேட்டரி பயன்படுத்த வேண்டாம்.

ஏனெனில் இது ஷார்ட் சர்க்யூட், அதிக வெப்பம் அல்லது கசிவு போன்ற ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. படுக்கை அறையில் சார்ஜ் போடுவதை தவிர்ப்பதோடு தலையணைத்தில் செல்போன் வைத்து தூங்க வேண்டாம். தலையணை அடியில் வைத்து படுத்தால் சூடாகி ஷார்ட் சர்க்யூட் ஏற்படும். போன் அதிகமாக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஸ்மார்ட் போனில் குறிப்பிட்ட வெப்ப நிலை வரம்புகள் வைத்திருப்பார்கள். அதனால் வரம்பு மீறி வெப்பமாகும் போது தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசுவது எளிதில் தீப்பிடிக்க கூடும். எனவே சார்ஜ் போடும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம். ஃபோனில் சிப் ஓவர்லோடு செய்யப்பட்டால் தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது