
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைப்பதற்கு ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் என்ற நிறுவனமானது கையெழுத்திட்டது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பசுமை ஹைட்ரன் அலகை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக,
ஜப்பானிய நிறுவனங்களான SOJITZ CORP மற்றும் KYUSHU ELECTRIC POWER உடன் இணைந்து செம்ப்கார்ப் நிறுவனம் இந்த பணியை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.