
இங்கிலாந்தில் parasomnia என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெல்லி நைப்ஸ் என்ற பெண் ஒருவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே ஆன்லைனில் 3.2 லட்சத்திற்கு பொருட்களை வாங்கி குவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இவர் பெற்ற பல பொருள்கள் தனக்கு உபயோகமே படாதவை என்றும் தனது கிரெடிட் கார்டு விவரங்கள் ஆன்லைன் செயலிகளில் கொடுக்கப்பட்டுள்ளதால் விபரீதமாவதாகவும் அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிய வகை நோயால் அவர் கடனாளியாக மாறியுள்ளார் என்பதும் மற்றொரு அதிர்ச்சி தகவலாகும். தூக்கத்தில் இப்படி ஒரு வினோதமான நோய் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.