துலாம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு சிரமங்கள் தீர்ந்து சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணியிட மாற்றங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். பெண்களும் மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் நல்லது. நடக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

முயற்சி திருவினையாக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. மன மகிழ்ச்சி அடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று பெண்களுக்கு சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் வரும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முன்னேற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்