“தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது தொடரும்பட்சத்தில், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் நிலவும் புகைச்சல் தற்போது சென்னை வீதிகளில் பகிரங்க மோதலாக வெடித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தைக் குலுக்கியுள்ளது.
சென்னையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் வந்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டாத குறையாக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
செல்வப்பெருந்தகையைப் பார்த்த உடனே ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள், அவரை நோக்கி ‘துரோகி.. துரோகி..!’ என்று அனல் பறக்கக் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அந்த இடமே ஒரு நொடியில் போர்க்களமாக மாறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்களும் பதிலுக்குக் களம் இறங்கியதால் இருதரப்பிற்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியது. முன்னாள் கூட்டணித் தலைவரையே பொது இடத்தில் வைத்து திமுகவினர் ‘துரோகி’ என முகத்திற்கு நேராக முழக்கமிட்ட இந்த விவகாரம், அறிவாலயம் மற்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.”
சென்னை: செல்வப்பெருந்தகை வந்தபோது ”துரோகிகள்” என திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு..!!#Selvaperunthagai #DMK #QuaideMillat #Congress #Newstamil24x7 pic.twitter.com/sb6qvUIiqM
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 5, 2026
“>
