கேரள மாநிலம் கோழிக்கோடு  பகுதியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா என்னும் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் மேனேஜராக மது ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழ்நாடு திருச்சி பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கொச்சியில் உள்ள கிளை வங்கி அலுவலகத்திற்கு கடந்த ஜூன் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார். அதனால் பனூரை சேர்ந்த இஷாத் என்பவர் புதிய மேனேஜராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து இஷாத் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஆய்வு செய்தார்.

அந்த சமயத்தில் தங்க நகைக்கு பதிலாக போலி நகைகள் மாற்றப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதைத் தொடர்ந்து இந்த செயலை செய்த மது ஜெயக்குமார் புதிய பணியிடத்தில் சென்று சேரவில்லை என்பது தெரிய வந்தது. அதோடு 42 பேர் அடகு வைத்துள்ள நகைகளை அவர் மொத்தமாக சுருட்டி கொண்டு சென்றது அந்த இடத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் வங்கிக்கு ரூ 17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் காவல் நிலையத்தில் இந்த செயலை செய்த மது ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி நகைகளுடன் தலைமறைவான முன்னாள் மேனேஜர் மது ஜெயக்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.