துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள  பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்ததோடு பலி எண்ணிக்கை 4,500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகவும், 2-வது முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் 3 நாட்களுக்கு முன்பாகவே கணித்துள்ளார். இவருடைய டுவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5.33 மணிக்கு ஒரு‌ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூடிய விரைவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாக கூடிய அளவுக்கு தெற்கு- மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபான் போன்ற பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதிக்குள் 6 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுக்கு நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் கணித்தது போன்று பிப்ரவரி 6-ம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பூமிக் குலுங்க பல கட்டிடங்கள் இருந்து விழுந்ததோடு ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பிராங்க் ஹூகர்பீட்ஸ் உயிரிழந்தவர்களுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளதோடு இன்னும் பல நிலநடுக்கங்கள் ஏற்படும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.