துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரங்களிலிருந்து இன்னும் அங்குள்ள மக்கள் மீண்டு வராமல் இருக்கும் நிலையில் இஸ்தான்புல் நகரில் பெசிக்டாஸ் மற்றும் கென்யாஸ்போர் ஆகிய உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டி நடைபெறும் வேளையில் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் தீடீரென துருக்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் “துருக்கி அரசே ராஜினாமா செய். 20 ஆண்டுகளாக பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். மக்களை ஏமாற்றி வருகின்றீர்கள். எனவே ராஜினாமா செய்யுங்கள்” என்று கோஷங்களை எழுப்பி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக நூற்றுக்கணக்கான பொம்மைகளையும் ஆடுகளத்தில் அவர்கள் வீசி எறிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகள் வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அந்நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிரொளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.