தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருபுறம் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதற்கு வாரிசு அரசியல் நடப்பதாக விமர்சித்து வருகிறது.

அதே வேளையில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. குறிப்பாக பிரபலங்கள் சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் நடிகர் வடிவேலுவும் இதே உறுதியுடனும் விவேகத்துடனும் உதயநிதி ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை வடிவேலு நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். மேலும் அது குறித்தான புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.