
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் அமரன் என்ற திரைப்படத்தில் ராணுவ பின்னணியில் நடித்த வருகிறார். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் நிலையில் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் இதற்கு முன்னதாக இன்று நடிகர் வடிவேலு துணை முதல் நிதியை நேரில் சந்தித்த வாழ்த்தினார் என்பதை குறிப்பிடத்தக்கதாக ஆகும்.