ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 11ம் தேதி(நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தணிக்கைக் குழு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் புரோமோஷன் பணிகள் லண்டனில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்த வீடியோவை லைகா நிறுவனம் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.