வாரிசுடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தில் ராஜு தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் ஜன-11 தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் தில் ராஜு நேற்று தெரிவித்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் வாரிசுடு திரைப்படம் எந்த திரைப்படத்திற்கும் போட்டி கிடையாது. சிரஞ்சீவி பாலகிருஷ்ணா உள்ளிட்டோரின் திரைப்படங்களுடன் இத்திரைப்படம் போட்டியில்லை. தெலுங்கு திரையுலகத்தினரின் ஆலோசனைப்படி படத்தை வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றோம் என தெரிவித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணன் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்படங்கள் முதல் சில நாட்கள் நல்ல வசூலை பெரும் நிலையில் வாரிசுடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தில் ராஜு தள்ளி வைத்திருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.