ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும்  படம் “துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் தமிழகத்தில் வசூலை குவித்து வருகிறது.

இப்படத்தில் அஜித் செய்த Moon Walk, அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத், “படத்தின் முதல் பாதியில் வரும் நடனம் சிலவற்றை அஜித் சாரா ஆடினார். Moon Wallk  அவராகவே ஆசைப்பட்டு ஆடினார்” என்று கூறியுள்ளார்.