குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் முதலைகள் வலம் வர துவங்கியுள்ளது. அப்படி குஜராத்தின் வடடோரா பகுதியிலும் முதலை நுழைந்துள்ளது.

இதனை அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டு இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து முதலையை மடியில் வைத்துக் கொண்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்க சென்றுள்ளனர். சாலையில் முதலையை கொண்டு போவதை பார்த்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரல் ஆகியுள்ளது.