
அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும். இதனால் இனி ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மகன் உட்பட 51 ஜோடிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இ பி எஸ் திருமணம் செய்து வைத்தார். திருமண விழாவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். இபிஸ்க்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து விழா மேடையிலேயே அதிமுக தலைவர்கள் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.