மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். தகுதி இருந்தும் ரூ.1000 வழங்கவில்லை என குமுறிய சுமார் 9 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. தகுதியான பெண்கள் எத்தனை பேர். தீபாவளிக்கு முன் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தலாமா?, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கலாமா? என ஆலோசிக்கப்படவுள்ளது.