
நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு. 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்புமாறு, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக நாட்களை விட பண்டிகை காலம் என்பதால், ரேஷன் பொருட்களுக்கான தேவை கூடும் என்பதால், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உ இதனால், பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்கள் ஏமாற்றமின்றி, மலிவு விலையில் உணவு பொருட்களை வாங்கிச்செல்லலாம்.