
தமிழகத்தில் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. அதாவது ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிடர் நல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதால் திமுகவினர் கொந்தளிப்பில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் திராவிடர் நல் திருநாடும் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழர் திருநாடும் என்ற வார்த்தையை சேர்த்து இணையதளங்களில் மிகவும் வைரல் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் இந்த பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக 1500 மது கடைகளை திறக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை திசை திருப்பும் நோக்கத்தில் தான் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார்கள். ஏற்கனவே ஆளுநரை மாற்ற திமுக திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது இதனை ஒரு பெரிய பிரச்சினையாக உருவாக்கி வருகிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி இரண்டாவது மொழியாக இருக்கிறது. ஹிந்தி மொழியை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் நுழைய விட்டது திராவிட கட்சிகள் தான். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே ஹிந்தி தமிழ்நாட்டில் நுழைந்துவிட்ட நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களுடன் திமுக கூட்டணி வைத்துவிட்டு தற்போது ஹிந்தியை எதிர்கிறது. மேலும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழ் தாய் வாழ்த்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக நல்ல தமிழ் பாவலர்களை வைத்து தரமான பாடல்கள் எழுதப்படும் என்று கூறினார்