
தமிழகம் முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையிலிருந்து நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 1520 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று கும்பகோணம் கோட்டம் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அதனைப் போலவே திருச்சியில் இருந்து 600 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.