தீபாவளி விடுமுறைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக நவ.9,10,11 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து ( கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர். தாம்பரம், பூவிருந்தவல்லி) 3 நாட்களுக்கு ஏற்கெனவே இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து 10,975, பிற ஊர்களில் இருந்து 5,920 என மொத்தம் 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து தீபாவளி பண்டிகை கால குறைந்தபட்ச, அதிகபட்ச ஆம்னி பேருந்து கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை – கோவை – 1,725 முதல் 2,874 வரை

சென்னை – சேலம் – 1,363 முதல் ரூ1,895 வரை

சென்னை – மதுரை – 1,688 முதல் 2,554 வரை

சென்னை – திருச்சி – 1,325 முதல் 31,841 வரை

சென்னை – நெல்லை – 1,960 முதல் 3,268 வரை

சென்னை – நா.கோவில் – 2,211 முதல் 3,765 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது