மலையாளத் திரையுலகில் நகைச்சுவை நடிகையாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் சுபி சுரேஷ் (42). இவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த சுபி சுரேஷ் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென சுபி சுரேஷ் மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகை சுபி சுரேஷின் மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.