அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இளைஞர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்த படி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் உயிரிழந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகரான ஜேன்சன் பனெட்டீர் (28) என்பது தெரிய வந்துள்ளது. இவர் பிரபல நடிகை ஹெய்டன் பனெட்ரீனின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில் நடிகர் ஜேன்சன் கடந்த 2004-ம் ஆண்டு பிரபல டிஸ்னி சேனல் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில், பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், தொழில் முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக திறமைகளை கொண்ட ஜேன்சன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.