
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துவிட்டு அனைத்தையும் பொது தரிசனமாக மாற்ற இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பாரபட்சமின்றி அண்ணாமலையாரை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பணம் அதிகம் கொடுத்தால் கடவுளை அருகில் சென்று வேகமாக பார்க்கலாம் என்ற நிலை அனைத்து கோவில்களிலும் மாற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.