சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ, பார்ப்பவர்களைச் சிரிக்க வைப்பதோடு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அலிலா கோட்டை பிஷன்கரில் நடைபெற்ற ஒரு வெளிநாட்டவர் மற்றும் இந்தியரின் திருமணத்தில், ‘வர்மாலா’ எனப்படும் மாலை மாற்றும் சடங்கின் போது எதிர்பாராத நகைச்சுவை அரங்கேறியது.

மேலும் வழக்கமாக மணமக்களிடம் மாலைகளைக் கொடுத்து மாற்றச் சொல்வதற்குப் பதிலாக, மாலைகளை ஏந்தி வந்த இரண்டு சிறுவர்கள், சடங்குகளைத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த மாலைகளை மணமக்களின் கழுத்தில் தாங்களே அணிவித்தனர். இந்தத் திடுதிப்பையான செயலால் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்ட காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Weddings by Ekta Saigal Lulla (@weddingsbyesl)

“>

இந்தத் தவறு நடந்த சில நொடிகளிலேயே, சடங்கு முடிந்துவிட்டதாகக் கருதிய பின்னணிப் பணியாளர்கள் திட்டமிட்டபடி பூக்களைத் தூவத் தொடங்கினர். சடங்கு சரியாக நடைபெறாவிட்டாலும், அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக அமைந்த இந்தப் பூ மழை அங்கிருந்த விருந்தினர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் “இந்தக் குழந்தைகள் செய்த செயலால் இந்து திருமணச் சட்டம் இந்த நான்கு பேருக்கும் பொருந்துமா?” எனப் பயனர்கள் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். கலாச்சார மாற்றங்கள் மற்றும் மழலைகளின் அறியாமையால் உருவான இந்தத் தருணம், தற்போதைய இணையத்தின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது.