
ஒடிசா மாநிலம் நபரங்குபூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திர ராவுட் என்பவரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த திலப்பதி கோந்த் என்ற பெண் காதலித்துள்ளார். ஆனால் சந்திர ராவுட் திருமணமானவர். இந்நிலையில் கோந்த் சந்திர ராவுட்டை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது சந்திர ராவுட் மறுத்து தகராறு செய்துள்ளார். அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் கோந்துடன் சண்டையிட்டுள்ளார்.
இதில் கோந்த் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து கோந்தின் சடலத்தை அப்பகுதியில் உள்ள காட்டிற்கு எடுத்துச் சென்று 30 துண்டுகளாக வெட்டி ஒரு இடத்தில் புதைத்துள்ளனர். கோந்த் ஆடைகளையும் இத்தம்பதி எரித்து விட்டனர். இந்நிலையில் அவர்கள் சடலத்தை வெட்டிய இடத்தில் கிடந்த ரத்தத்தை பார்த்த நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்திர ராவுட் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.