நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

அதில், நடிகை என்றால் விற்பனைப் பெருள் அல்ல. அவளுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. சிறிய விஷயங்களுக்கு கூட அழுவேன் என ஒரு கேள்விக்கு பதிலளித்தார். மேலும், ‘எப்போது திருமணம்’ என்ற கேள்விக்கு, சலிப்பான கேள்விகளை கேட்காதீர்கள், என்தெரிவித்துள்ளார். அப்பா பெரிய நடிகராக இருந்தாலும், என் சம்பாத்தியம் மட்டும் எனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.