சீனாவில் சமீப காலங்களாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  பல வருடங்களாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016- ஆம் ஆண்டு அரசு தளர்த்தியுள்ளது . அந்த நாடு கடந்த வருடம் முதல் ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சிச்சுவானில் திருமணம் ஆகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மானியங்கள் போன்றவை இனி திருமணம் ஆகாத தம்பதியினருக்கும் கிடைக்கும். வருகிற 15-ஆம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனவும்  திருமண மாணவர்கள் மற்றும் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாக திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்கள் மிகவும் குறைந்துள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.