
திருச்சி மாவட்டத்திலுள்ள ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் நாசர் அலி என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கேகே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதில் 5 வயதில் ஒரு மகன் இருந்தார்.
இந்நிலையில் நாசர் அலி தன்னுடைய நண்பனான வேலுமணி என்பவருடன் சேர்ந்து அந்த 5 வயது சிறுவனை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றியதோடு பின்னர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிப்பதற்காக சென்ற போது இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இருப்பினும் பொதுமக்கள் விடாமல் அவர்களை துரத்தி சென்று பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.