உத்திரபிரதேசம் மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்த வர்சராணி(25) என்ற பெண் சிஎச்ஓவாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் திருமணத்திற்கு பிறகும் அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலனுக்காக கணவரையும் விட்டு பிரிந்து சென்ற நிலையில் பல வருடங்களாக காதலனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் இறுதியில் காதலனும் அந்த பெண்ணை ஏமாற்றி உள்ளார். இதனால் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.