
விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சைனைடு கலந்த மதுவை குடித்ததால் உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது மணிகண்டனுக்கு திருமணம் ஆகி தமிழரசி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சங்கர் என்பவருடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது பற்றி மணிகண்டனுக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதில் சங்கர் சென்னையைச் சேர்ந்தவர். இருவருக்கும் சென்னையில் இருக்கும் போது உறவு இருந்த நிலையில் பின்னர் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் தமிழரசி சங்கருடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இந்த விவகாரம் மணிகண்டனுக்கு தெரிய வரவே தன் மனைவியை மீண்டும் கண்டித்ததால் ஆத்திரத்தில் தன் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அதன்படி சங்கர் அவருடைய நண்பர்கள் ஆன கார்த்திக் ராஜா மற்றும் சீனுவாசன் ஆகியோர் கொலை செய்ய திட்டம் தீட்டினர். பின்னர் மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கார்த்திக் ராஜா மனைவி சம்பவ நாளில் மணிகண்டனுக்கு தொடர்பு கொண்டு வேலை இருப்பதாக கூறி இந்திரா நகர் பகுதிக்கு வரவழைக்க அங்கு மணிகண்டன் கார்த்திக் ராஜா மற்றும் சீனிவாசன் ஆகியோர் இணைந்து மது குடித்தனர். அப்போது மணிகண்டனுக்கு சயனைடு கலந்த மதுவை கொடுத்துள்ளனர். இதில் தான் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தமிழரசி, சங்கர், கார்த்திக் ராஜா மனைவி ஸ்வேதா மற்றும் சீனிவாசன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள கார்த்திக் ராஜாவை போலீஸ் தேடி வருகிறது.