திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி மனு அளிக்கப்பட்டது.  பாரத் ஹிந்து முன்னணியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சேலம் மாநகர சைபர் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.