திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்.,22 முதல் 28 வரையிலான 3300 தரிசன டிக்கெட் பிப்.,13-ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு பிப்.,14-ந் தேதி காலை 9 மணிக்கு டிக்கெட் ஆன்லைனில் (tirupatibalaji.ap.gov.in) வெளியிடப்படும்.