திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் முன்னதாகவே ஆன்லைன் டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. இந்த டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற்று வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இன்று ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டை வெளியிட உள்ளது. பக்தர்கள் சுப்ரபாதம்,தோமாலை மற்றும் அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மே 20ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன் மே 23ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.