நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பண்டிகை நேரங்களில் ரயிலில் பயணம் செய்ய பலரும் போட்டி போடுவதால் புதிதாக டிக்கெட் வாங்க சென்றால் சில நேரங்களில் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி சிரமப்பட்டு வாங்கிய டிக்கெட் தொலைந்து விட்டால் நீங்கள் பயப்பட வேண்டாம். இதற்காக ரயில்வே நிர்வாகம் டூப்ளிகேட் டிக்கெட் வழங்குகின்றது.

ஆனால் இந்த டிக்கெட் பெற விதிகள் மற்றும் கட்டணங்களில் மாற்றங்கள் உள்ளன. அதாவது உங்களுடைய டிக்கெட் தொலைந்து விட்டால் ஸ்டேஷனில் உள்ள பயணிகள் டிக்கெட் பரிசோதனை தொடர்பு கொள்ள வேண்டும். பிறகு டிக்கெட் விவரங்கள் மற்றும் பதிவு விவரங்களை பெற்றுக்கொண்டு டிக்கெட் கவுண்டருக்குச் சென்று நகை டிக்கெட்டை கேட்க வேண்டும். அதற்கு கூடுதலாக செலவாகும். மேலும் டிக்கெட் தொலைத்ததற்கான அபராதமும் வசூலிக்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்ற பக்கத்தை அணுகலாம்.