திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை கணக்கிட்டு எவ்வளவு காணிக்கை கிடைத்தது என்பது குறித்து வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில் திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது அந்த பணத்தை ஊழியர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை பிடித்து கோயில் நிர்வாகம் போலீசில் ஒப்படைத்துள்ளது. நேற்று தேவஸ்தான பணியாளர்களுடன் இணைந்து ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் என்பவரும் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 72,000 மதிப்புள்ள US $ நோட்டுகளை ஆடைக்குள் வைத்து திருட முயற்சித்து, விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.