திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் “அண்ணாமலை நற்பணி மன்றம்” எனும் அமைப்புக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து, அண்ணாமலை தனது எக்ஸ்பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். “இன்றைய தினம், திருநெல்வேலியில் எனது பெயரில் நற்பணி மன்றம் அமைக்கப்பட்டு, கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் எனது மீது வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,
வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி…
— K.Annamalai (@annamalai_k) October 17, 2025
“>
தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “இது போன்ற அமைப்புகள் மற்றும் கொடி உள்ளிட்ட செயல்களில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை. எனவே, என் பெயர் மற்றும் புகைப்படம் போன்றவற்றைப் பயன்படுத்தும் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வருங்காலத்திலும் இதுபோன்ற செயல்பாடுகளை தவிர்க்க அனைவரையும் வேண்டுகிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். அதுபோல, முதலில் உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்ப நலனில் கவனம் செலுத்துங்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்
