தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் அவருடைய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் வருகிற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு என்பது பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பிறகு நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அரசியல் என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்பவர்களுக்கு முதல் கட்சி மாநாடு அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அமையும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து அவருக்கு பல்வேறு விதத்தில் திமுக கட்சி தடைவிதித்து வருவதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாகவே குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதால் திமுகவுக்கு வாக்கு வங்கிகள் சரியும் என்பதால் தான் அவருடைய கட்சிக்கு தொடர்ந்து சிக்கல்களை கொடுத்து வருகிறது என்றும் திமுகவினருக்கு விஜயை பார்த்து பயம் என்றும் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் அவர் போட்டியிடும் அதே தொகுதியில் அவருக்கு எதிராக பிரகாஷ்ராஜை களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதே சமயத்தில் பிரகாஷ்ராஜை வேட்பாளராக நியமிப்பாளர்களா அல்லது வெறுமனை பிரச்சாரத்திற்காக மட்டுமே திமுகவினர் பயன்படுத்துவார்களா என்பது சரிவர தெரியவில்லை.

ஏனெனில் திமுகவினரின் கொள்கைகள் பிரகாஷ்ராஜுக்கு ஒத்துப்போவதால் அவரை விஜய்க்கு எதிராக களம் இறக்க திமுக மாஸ்டர் பிளான் போடுவதாக தெரிகிறது. இருப்பினும் சினிமா வட்டாரத்தில் அது உண்மையாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் நடிகர் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்து கில்லி, வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் அடுத்ததாக எச்‌. வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்திலும் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளார்.

மேலும் திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இடையே மோதல் நிலவ வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும் அரசியல் என்பது வேறு என்பதால் பிரகாஷ்ராஜ் ஒருவேளை விஜய்க்கு எதிராக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பிரகாஷ்ராஜ் தன் மனதில் பட்ட கருத்துக்களை தைரியமாக சொல்வார். இதன் காரணமாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்க்கு எதிராக திமுக யாரை வேட்பாளராக நியமிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.