திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமணையில் வட்டார கிருஸ்துவ பேரவை இயக்க செயலாளர் ஸ்டீபன் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அப்போது ஸ்டீபன் தமிழக முதல்வர் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனை திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபு செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை பார்த்து ஸ்டீபன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிரபுவை விரட்டி சென்று செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தவறி கீழே விழுந்த போதும் தொடர்ந்து அவர்கள் தாக்க முயன்றதால் பிரபு வேஷ்டி அவிழ்ந்த நிலையில் அரை நிர்வாணமாக ஓடி தப்பினார். அந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.