
தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டு தமிழக அரசியலில் புயலை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 500 கோடி ரூபாய் அபராதம் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர் எஸ் பாரதியின் வக்கீல் நோட்டீசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். அதில், திமுக குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மையே. யாரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவமானம் செய்வது செய்தியாளர் சந்திப்பில் நோக்கமில்லை. சொத்து பட்டியல் விவகாரத்தில் ஆர்எஸ் பாரதி கேட்டபடி 500 கோடி இழப்பீடு தர முடியாது. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. திமுகவினர் சேர்த்துள்ள ஊழல்களை அடிப்படை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்துள்ளேன் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.