தமிழகத்தில் நடந்து முடிந்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. தங்களை ‘தூய சக்தி’ என்று மேடைகளில் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தவெக அரசு, தற்போதைய சூழலில் தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கொள்கை ஏதுமின்றி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாகப் போய் விழுந்துள்ளது என்று இபிஎஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​மேலும் தனது அறிக்கையில் அக்னிப் பிழம்பாய் சாடியுள்ள எடப்பாடியார், “தேர்தல் களம் வரை தங்களைத் தூய சக்தியாகக் காட்டிக்கொண்டவர்கள், இப்போது சுயரூபத்தைக் காட்டி துஷ்ட சக்தியாக மாறியுள்ளனர். திரைமறைவில் குதிரை பேர அரசியல் வியாபாரத்தை நடத்தி, அநாகரிகமான முறையில் அதிமுகவின் முதுகில் குத்தியுள்ளனர்” என்று கொதித்தெழுந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நேரடி அணு குண்டு தாக்குதல் அறிக்கை, தவெக மற்றும் திமுக கூட்டணி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோசியல் மீடியாவில் இதுகுறித்த விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன.