சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் திமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுவரையில் 2700 க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அது விரைவில் 3000-ஐ தாண்டும். அதிமுக ஆட்சியின் போது அறநிலையத்துறை அமைச்சர் இருக்கிறாரா அவருடைய பொறுப்பு என்ன என்றெல்லாம் கேள்வி எழுந்தது. சங்கிகள் தற்போது தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விவகாரத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள். திமுக ஆட்சி அமைத்த பிறகு கோவில்களில் 17 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. குற்றவாளிகள் பக்கத்து மாநிலங்களுக்கு ஓடிவிடும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக நடக்கும் குற்றங்களுக்கு கூட உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாகத்தான் திகழ்கிறது. பாஜக பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை கெடுக்க பாஜக முயற்சி செய்கிறது என்று கூறினார்.