திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது முற்றிலும் ஆதாரமற்ற கட்டுக்கதை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தன்பக்கம் இழுக்க முதலமைச்சர் முயற்சிப்பதாகப் குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களைத் திருடும் வேலையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் விஜய்தான் உண்மையான ‘களவாணி’ என்றும் அவர் கடும் கோபத்துடன் விமர்சித்துள்ளார்.

அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மீதான இந்த அதிரடித் தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.